உண்ணாவிரதம் என்பது மதரீதியாக பின்பற்றப்படும் ஒரு சடங்காகவே தற்போது வரை கருதப்பட்டு வருகிறது. உண்ணாவிரதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவை தவிர்த்து, குறிப்பாக மூன்று வேளை சாப்பிடுவதை தவிர்த்து ஒரு வேளையாக குறைத்து சாப்பிடுவது தான் உண்ணாவிரதம்.
இன்றைய காலகட்டத்தில் மதம், ஆன்மீகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியர்கள் மட்டும் இன்றி உலக நாடுகளிலும் உண்ணாவிரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையாக பசி எடுக்கும்போது தேவைப்படும் உணவுகளை நாம் உண்கிறோம். நாம் அன்றாடம் குறிப்பிட்ட வேலையில் சாப்பிடுவதால் பசி என்றால் என்ன என்பது பலருக்கு தெரியவில்லை. உணவின் மீது பசி இல்லாத போது உணவை தவிர்க்க வேண்டும் என்ற உடலின் இயல்பான அழைப்பை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?உணவை சரியான நேரத்தில் நிறுத்தினால் நோய் நீங்கும்.உண்ணாவிரதத்தால் பலவீனம் ஆகிறோம் என்பது சரியான கூற்று அல்ல.உண்ணாவிரதத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக இதில் பார்க்கலாம்.
உண்ணாவிரதத்தை கடைபிடித்தால் முதலில் ஆரோக்கியமாக இருப்பது குடல்தான் குடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்த உண்ணாவிரதம் சிறந்த தீர்வாக உள்ளது.
உண்ணாவிரதத்தால் குடலில் ஏற்படும் நன்மைகள்
உண்ணாவிரதம் இருக்கும் போது உறுப்புகள் சாதாரணமாக செய்யும் பணிச்சுமை குறைகிறது உணவு உட்கொள்ளாததால் செரிமானம் நடைபெறாது. எனவே, தேவையான அனைத்து சக்தியும் சேமிக்கப்பட்டு உடல் உறுப்புகளில் இருந்து நோயற்ற பொருட்களை அகற்ற சிறந்த தீர்வாக உண்ணாவிரதம் அமைகிறது. மேலும் உடல் ஆற்றல் சக்திகளை முழுவதுமாக பெற முடியும்.
நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது
உண்ணாவிரதம் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிருக்கு அவசியமான லாக்டோபாகிலஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
குடல் வீக்கம் குறையும்
உண்ணாவிரதம் இருக்கும்போது குரலில் ஏற்படும் அதீத வீக்கம் குறையும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குடல் அழற்சி நோய் தவிர்க்கப்பட்டு குடல் சீராக செயல்பட உதவும். புரதங்களின் உற்பத்தியை ஊக்குவித்து குடலை வலுவடைய செய்யும். மேலும் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் உருவாகும் கெட்ட பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் நுழைவதை தடுக்கிறது.
மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கும்
மனிதர்களில் பல பேருக்கு மலச்சிக்கல் நோய் உடலில் இருப்பது தெரியாமல் உள்ளது. உடலில் உள்ள உணவு கழிவுகளை தினசரி இரண்டு நேரம் குடல் கட்டாயம் வெளியேற்ற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மலச்சிக்கல் உருவாகிறது. உண்ணாவிரதம் இருக்கும் போது ஆரோக்கியமான குடல் இயக்கத்தை நம்மால் உறுதி செய்ய முடியும் குறிப்பாக மலச்சிக்கல் அபாயத்தை குறைத்து ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
குடல் கோளாறுகளின் அறிகுறிகள்
எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி மற்றும் சிறுகுடல் கெட்ட பாக்டீரியா வளர்ச்சி போன்ற பிரச்சனைகளை உண்ணாவிரதம் குறைக்க வழி வகுக்கும் என மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குடல் கெட்ட பாக்டீரியா மற்றும் அலர்ஜி காரணமாக குடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
குடலில் ஊட்டச்சத்துகளை உறிஞ்சிதல்
தொடர் செரிமான வேலைகளில் இருந்து குடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பெறுவதை உறுதி செய்ய முடியும்.
உடல் எடை சீரமைப்பு
உண்ணாவிரதம் பசியின் ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும், அதிக உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைக்கவும், உடலின் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும். மேலும் உடல் பருமன் மற்றும் குடல் பிரச்சனைகளின் அபாயத்தை குறைத்து ஆரோக்கியமான குடல் செயல்பாடுகளை நிர்ணயிக்கும்.
குடல் தன்னியக்கம்
உண்ணாவிரதம் உடலில் தன்னியக்கம் என்ற செயல்முறையை தூண்டுகிறது. உடல் மற்றும் குடலில் சேதமடைந்த செல்கள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும்.
ஆரோக்கியமான உண்ணாவிரதம்
உண்ணாவிரதம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் மேலும் மன ரீதியான பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சுறுசுறுப்பாக செயல்பட உண்ணாவிரதம் உதவும் மேலும் ஒரு ஆரோக்கியமான குடல் சிறந்த உடலுக்கும் மனநலத்திற்கும் வழிவகுக்கும். இதனால் உடல் மற்றும் முகப்பொலிவு ஏற்பட்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.உண்ணாவிரதம் உடல் ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சான்றான பல பலன்களை கொண்டுள்ளது. சரியான முறையில் கையாண்டால் உண்ணாவிரதத்தால் பல நன்மைகளை நாம் பெறலாம்.