Big boss season 7 Maya: சர்ச்சைக்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மாயா... பிக்பாஸில் வெற்றி பெறுவாரா?.

வழக்கம் போல் சண்டைகளுக்கும், பொழுதுப்போக்கிற்கும் பஞ்சம் இல்லாமல் 100 நாள்களை வெற்றிக்கரமாக முடித்துள்ளது பிக்பாஸ் சீசன் 7.

Jansi Malashree V
Big boss maya final list

தனியார் தொலைக்காட்சியில் மிகவம் பிரபலமாக ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி,  தற்போது7 வது சீசனையும்  வெற்றிகரமாக முடிக்கவுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சீசன் 7 கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா, விஷ்ணு விஜய், மாயா எஸ். கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா என 18 போட்டியாளர்களுடன் சீசன் தொடங்கியது. இதில் வைல்டு கார்டு என்டிரியாக பேச்சாளர் அன்ன பாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிரோவோ உள்ளிட்டோர் களம் இறங்கினர்.

வழக்கம் போல் சண்டைகளுக்கும், பொழுதுப்போக்கிற்கும் பஞ்சம் இல்லாமல் 100 நாள்களை வெற்றிக்கரமாக முடித்துள்ளது பிக்பாஸ். இறுதி போட்டியாளர் யார்? என எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துவிட்டது. தற்போது விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணா, வி ஜே அர்ச்சனா, மணி சந்திரா, தினேஷ் ஆகியோர் தான் இறுதி ஆட்டத்தில் உள்ளனர்.  மாயாவும் அர்ச்சனாவுக்கும் இடையில் தான் போட்டிகள் வலுப்பெற்றுள்ளது.  குறிப்பாக மாயா போட்டியில்  ஜெயிப்பார் என்ற மனநிலை இருந்தாலும் ரசிகர்களிடம் பல எதிர்மறையான கருத்துக்களோடு மாயா இறுதி ஆட்டத்தில் ஆடி வருகிறார்.

யார் இந்த மாயா?

மதுரையை சேர்ந்த மாயா எஸ்.கிருஷ்ணன் தனது சொந்த ஊரிலே பள்ளிப்படிப்பைத் தொடங்கி பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்தவர். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தமையால், தேசிய அளவில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் பங்கேற்று பல விருதுகளை வாங்கியுள்ளார். விளையாட்டில் மட்டுமல்ல, நடிப்பு, மாடலிங் என அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆனாலும் சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.  மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0 உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடத்தி வந்த நிலையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் சீசனில் அனைவராலும் கவனிக்கக்கூடிய பிரபலமாக உருவாகியுள்ளார். சண்டை, சச்சரவுகளோடு 100 நாள்கள் தாக்குப் பிடித்து வந்துள்ள இவர் டைட்டில் வின்னரை அடிப்பாரா? என்ற ஆர்வம் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.

Maya big boss

மாயா குறித்த மக்களின் கருத்துக்கள்:

பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாள்களை வெற்றிக்கரமாக முடிந்திருந்தாலும் பல நேரங்களில் அங்குள்ள போட்டியாளர்களை ஏமாற்றி விளையாடுகிறார் என மக்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். சீசன் முழுவதும் பார்வையாளர்களுக்கு என்டெர்டைன்மென்டாக இருந்தாலும் ஏமாற்றி விடுவது கொஞ்சம் வருத்தமாக உள்ளது எனவும் மக்கள் கருத்துக்களைப் பகிர்கின்றனர்.

சில நேரங்களில் டாஸ்க்கை முடிக்க வேண்டும் என்பதற்காக நல்ல முறையில் விளையாடியுள்ள இவர் டைட்டில் வாங்கினால் மகிழ்ச்சி தான் என பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். மாயா வச்சு தான் பிக்பாஸ் ஓடுகிறது என்ற மனநிலையை அவர் உருவாக்கிவிட்டார் எனவும், அதற்கேற்ப சேனல்களும் ஆதரவு தெரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழும்பியுள்ளது. முந்தைய சீசன்களில் டைட்டில் வின்னர் பெற்ற யாரையும் நாம் நியாபகத்தில் வைத்தது இல்லை.. சர்ச்சையில் இருப்பவர்கள் தான் இதுவரை மனதில் இருக்கிறார்கள் என்பதால் மாயா வெற்றி பெற்றால் சிறப்பாக இருக்கும் எனவும் கருத்துக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 Maya and archana

தற்போது மாயாவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையில் போட்டிகள் வலுப்பெறுகிறது. இருந்தப்போதும்  30 நாள்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்டிரியாக அர்ச்சனா வந்தார் என்பதால் 100 நாள்கள் உள்ளே இருந்த மாயா வெற்றி பெற்றால் மிகுந்த சந்தோஷம் என்ற கருத்துக்களையும் பிக்பாஸ் ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

 

Disclaimer