ஒவ்வொரு ஆண்டுகள் காதலர்கள் கொண்டாடும் மாதமாக வலம் வந்து கொண்டிருக்கிறது பிப்ரவரி. காதலை அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்துவதற்காக பிப்ரவரி 14 ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் இளம் காதல் ஜோடிகள். இவர்கள் ஒவ்வொருவரும் காதலர் தினத்தை வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள். பலர் இந்த நாளில் எங்கேயாவது பயணம் செய்ய நிச்சயம் திட்டமிடுவார்கள். இதோ இந்தியாவில் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கான இடங்கள் என்னென்ன? எங்கு பயணிக்கலாம் என்பது குறித்து உங்களுக்கு பகிர்கிறோம்.
ஆக்ரா:
காதல் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது தாஜ்மஹால். ஷாஜஹான் தனது மனைவிக்கு கட்டிய இந்த கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்று என்பதை அனைவரும் அறிந்ததே. அன்பின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு உங்களது காதலியை அழைத்துச்சென்று காதலை மேலும் வலிமையாக்கிக்கொள்ளுங்கள்.
மணாலி பயணம்:
காதல் ஜோடிகள், திருமண தம்பதிகள் காதலர் தினத்தை ரொமான்டிங்வுடன் கொண்டாட வேண்டும் என்றால் மணாலி சிறந்த தேர்வு. காதலர்களுக்கு இதை விட சிறந்த இடம் நிச்சயம் இருக்க முடியாது. ஜில்லென்ற சூழலுக்கு நடுவில் பனிப்பொழிவுடன் விளையாடுவது உங்களது காதலர் தின நாளை மேலும் சிறப்பாக்கும்.
காதல் நகரமான உதய்பூர்:
காதல் கோட்டையாக இன்றைக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்பூர் வலம் வருகிறது. வானுயர்ந்த கோட்டைகளும், ஏரியில் அமைந்துள்ள அரண்மனைகளும் காதலர்களுக்கு சிறந்த இடம். காதலர் தின நாளில் உங்களது துணையுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும் என்றால் இந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். கிழக்கின் வெனிஸ், இந்தியாவின் காதல் நகரம், ராஜஸ்தானின் காஷ்மீர் என பல பெயர்களைக் கொண்டுள்ளது உதய்பூர்.
ஊட்டி/ கொடைக்கானல்
காதலர்கள் இயற்கை எழிலோடு இந்தாண்டு காதலர் தினத்தைக் கொண்டாட திட்டம் இருந்தால் ஊட்டியை தேர்வு செய்யுங்கள். தனிமையில் இனிமைக் காண்பதற்கே பல இடங்கள் உள்ளன. ஊட்டியில் எங்கு சென்றாலும் மனதை இதமாக்கும் சூழல் உங்களின் அன்பை மேலும் வலுவாக்கும்.
உங்களால் ஊட்டிக்கு செல்ல முடியவில்லை என்றால், மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலை தேர்வு செய்யுங்கள். இயற்கை எழில் கொஞ்சும் சூழல் உங்களது மனதை அமைதியாக்கி அன்பை அதிகளவில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். மேலும் சினிமாவில் வலம் வரும் காதல் ஜோடிகள் போன்று புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கொஞ்சும் கொடைக்கானலில் பண்ணவனூர் பக்கம் சென்று வாருங்கள்.
மூணாறு :
தென்னிந்தியாவில் காதலை வெளிப்படுத்த சிறந்த இடங்களில் ஒன்று. போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், ஜில்லென்ற சூழலில் தம்பதிகளுக்கு அனைத்து வகையிலும் சிறந்ததாக அமையும்.
ஆலப்புழா படகு இல்லம்:
சொகுசு கப்பலில் பயணித்துக் கொண்டே உங்களது அன்புக்குரியவர்களிடம் காதலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்களின் ஆலப்புழா படகு இல்லம் சென்று வாருங்கள்.
அப்புறம் என்ன? இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் காதலர் தினத்தை எங்கு கொண்டாடலாம் என்று சட்டென்று முடிவெடுத்து கிளம்பிடுங்க...
Image Credit - Freepik