ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது பன்னீர் கபாப். பன்னீர் மட்டுமல்ல சத்து நிறைந்த சோளம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து தயாரிக்க போகிறோம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு மணி நேரத்தில் இந்த பன்னீர் கபாப்-ஐ தயாரிக்கலாம். பூண்டு சாஸுடன் தொட்டு சாப்பிட இந்த கபாப் அருமையாக இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு இது அற்புத ஸ்நாக் அகும்.
பன்னீர் கபாப் செய்யத் தேவையானவை
- உரைந்த சோளம்
- கார்ன் பிளேக்ஸ்
- வெங்காயம்
- குடை மிளகாய்
- கேரட்
- உருளைக்கிழங்கு
- பன்னீர்
- மிளகு தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- பச்சை மிளகாய்
- பூண்டு
- மைதா
- சோள மாவு
- தண்ணீர்
- சில்லி பிளேக்ஸ்
கவனம் கொள்க
முதலில் 300 கிராம் உறைந்த சோளத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பேஸ்ட் போல் மாறிவிடக் கூடாது. இதே போல் 150 கிராம் கார்ன் பிளேக்ஸ்-ஐ மிக்ஸியில் போட்டு பவுடராக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
மேலும் படிங்க மும்பை ஸ்ட்ரீட் ஸ்டைல் ரகதா பாட்டிஸ் செய்முறை
பன்னீர் கபாப் செய்முறை
- அரைத்த உறைந்த சோளத்துடன் மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி போடவும், இதனுடன் பாதி குடை மிளகாய் மற்றும் ஒரு கேரட்டை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்
- இதன் பிறகு பொடிதாக்கிய முந்திரி பருப்பு, துருவிய 200 கிராம் பன்னீர், வேக வைத்த 100 கிராம் உருளைக்கிழங்கு சேர்க்கவும்
- இவற்றுடன் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் மிளகு தூள், கொஞ்சம் மிளகாய் தூள், இரண்டு பச்சை மிளகாயை நறுக்கி போடவும். தேவையான அளவு கொத்தமல்லியும் சேருங்கள்.
- ஸ்பூன் பயன்படுத்தி அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
- இதை 40 கிராம் அளவிற்கு சிறு சிறு உருண்டை பிடித்து கெட்டியாக்கவும்.
- இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எட்டு ஸ்பூன் மைதா மாவு, ஐந்து ஸ்பூன் கார்ன் பிளவர், கொஞ்சம் உப்பு போட்டு தோசை மாவு போல தண்ணீர் ஊற்றி மாவை தயார் செய்யவும்.
- இதை மாவில் முக்கி எடுத்து அரைத்து பவுடராக்கிய கார்ன் பிளேக்ஸில் வைத்து கோட்டிங் செய்யவும்.
- தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு உருண்டை பிடித்த பன்னீர் கபாப்-ஐ தட்டையாக்கி எண்ணெய்-ல் செலுத்தி பொன்னிறத்திற்கு வறுக்கவும்.
- இது உள்ளே மென்மையாகவும், வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
- எண்ணெய் அதிமாக பயன்படுத்துவது போல் தெரிந்தால் தோசைக்கல்-ல் கிரில் செய்யலாம். ஆனால் எண்ணெய்யில் வறுப்பதே சுவையாக இருக்கும். பன்னீர் கபாப் ரெடி...
- தற்போது பூண்டு சாஸ் தயாரிக்கலாம். கடாயில் ஐந்து ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி, மூன்று ஸ்பூன் நறுக்கிய பூண்டு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
- பச்சை வாடை போவதற்கு இரண்டு நிமிடங்கள் ஆகும். இதனுடன் 50 கிராம் சர்க்கரை, 150 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். கொஞ்சம் நேரத்திற்கு கிளறிகொண்டே இருக்கவும்.
- இந்த சமயத்தில் கால் ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மிளகு தூள், ஒரு டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும். ஐந்தே நிமிடங்களில் சாஸ் தயாராகி விடும்.
இப்போது பூண்டு சாஸுடன் பன்னீர் கபாப்-ஐ தொட்டு சாப்பிடவும்.