தமிழ் திரையுலகில் இந்த வருடம் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. இதில் ஒரு சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் டாப் 5 படங்களில் ஒரிரு படங்களைத் தவிர மற்ற படங்கள் குறைவான பட்ஜெட்டில் தயாராகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் ஆகும். ஐஎம்டிபி மதிப்பெண்களும் படங்களை வரிசைப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன.
போர் தொழில்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் போர் தொழில் படம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்டிபி தளத்தில் ரசிகர்கள் போர் தொழில் படத்திற்கு எட்டு மதிப்பெண் கொடுத்திருக்கின்றனர். வலுவான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, மிரட்டலான பின்னணி இசை, அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரின் அசத்தலான நடிப்பு என அனைத்துமே போர் தொழில் படத்திற்கு பெரும் பலம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெற்றோரின் வளர்ப்பு எவ்வளவு முக்கியத்துவம் என போர் தொழில் படத்தில் எடுத்துரைக்கப்பட்டு இருந்தது. 75 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாகவும் ஓடியது.
டாடா
கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் டாப் 5 பட்டியலில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறது. கதாபாத்திரங்களின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். கவினின் திரைப்பயணத்தில் டாடா திரைப்படம் எப்போதும் முக்கிய இடம் வகிக்கும். அமேசான் பிரைமில் டாடா திரைப்படம் இருக்கிறது. ஏன் விரிவாக எழுதாமல் இந்தப் படத்திற்கு இரண்டாமிடம் கொடுக்கப்பட்டது என படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.
மேலும் படிங்க 2023ல் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர்! யார் முதலிடம் தெரியுமா ?
சித்தா
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சமூகத்தில் எப்படி அரங்கேறுகின்றன எனத் திரையில் காண்பித்த இயக்குநர் அருண் குமாருக்கு பாராட்டுகள். படத்தைப் பார்த்த பெற்றோர் பலருக்கு விழிப்புணர்வும் ஏற்பட்டு இருக்கிறது. விவரம் தெரியாத வயதில் பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைகளைச் சந்தித்தால் அது அவர்களுடைய எதிர்காலத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என சித்தா படம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
விடுதலை
இயக்குநர் வெற்றிமாறனின் ஆகச் சிறந்த படைப்பாக விடுதலை திரைப்படத்தைக் குறிப்பிட முடியாது. எனினும் பிரிவினைவாத கும்பல்களைக் கட்டுப்படுத்தும் பெயரில் மக்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டனர் என்பதை உணர்த்த படத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சிகள் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தின. படத்தின் மேக்கிங் மூலம் தமிழ் சினிமாவின் தரத்தை வெற்றிமாறன் மேலும் ஒரு படி உயர்த்தி இருந்தார்.
மேலும் படிங்க Most Searched movies 2023 : ஜெயிலரை முறியடிக்க தவறிய லியோ, வாரிசு
ஜிகர்தண்டா டபுள் X
இது முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படம் என்றாலும் ரசிகர்களுக்கு வனம் குறித்து ஏற்படுத்திய புரிதலுக்காகவே டாப் 5 பட்டியலில் ஜிதர்தண்டா டபுள் X படத்திற்கு இடமளிக்கலாம். காடுகள் அழிப்பில் உள்ள அரசியல் பின்னணி குறித்து காட்சிகள் அமைத்திருந்த கார்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள். ஐ.எம்.டி.பி தளத்தில் ஜிகர்தண்டா டபுள் X படத்திற்கு ரசிகர்கள் 8.2 மதிப்பெண்கள் கொடுத்திருக்கின்றனர்.