குழந்தைக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

குழந்தையின் வளர்ச்சியில் மசாஜ் செய்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் செய்வது ஒரு விதமான பிணைப்பை உண்டாக்கும்.

Raja Balaji
how to massage a baby

குழந்தைகளுக்கு மசாஜ் செய்யலாமா என பெற்றோருக்கு சந்தேகம் இருந்தால் அதற்கான பதில் ஆம். ஏனென்றால் மசாஜ் செய்யும் போது குழந்தைக்கும் நமக்கும் இடையே இருக்கும் பிணைப்பு அதிகமாகும். பிறந்த குழந்தைகளை தொட்டு மசாஜ் செய்வது உறவை பலப்படுத்தக் கூடிய செயலாகும். கர்ப்பப்பையினுள் கை கால்களை அடக்கி ஒன்பது மாதங்கள் இருந்த குழந்தையின் உடலை தளர்த்திக் கொள்ள மசாஜ் செய்வது நல்லதாகும். எனவே குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவசியமே.

முன்பெல்லாம் பேபி மசாஜ் என்பது பாட்டி செய்யக்கூடிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது மசாஜ் மீது தாய்மார்களிடமும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே பேபி மசாஜ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

baby massage guide

மசாஜ் செய்வதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். ஒரு துணியின் மீது குழந்தையை படுக்க வைத்து மசாஜ் செய்ய ஆரம்பிக்கலாம். பொதுவாக குழந்தைகள் தூங்கி எழுந்த பிறகு மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும். அப்போது குழந்தை சற்று அமைதியாக இருக்கும்.  அதே போல குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பும் மசாஜ் செய்யலாம். இதையெல்லாம் விட குழந்தையை மசாஜ் செய்ய நம்முடைய மனநிலை சாந்தமாக இருக்க வேண்டும். 

அவசர அவசரமாக மசாஜ் செய்யக்கூடாது. குழந்தையை தொடும் விதம் மசாஜில் முக்கியமாகும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். தலையில் இருந்து பாதம் வரை தாராளமாகக் குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். குழந்தைகளுக்கு வலி வரும் அளவிற்கு அழுத்தி மசாஜ் செய்யக்கூடாது. மசாஜ் செய்ய பழகிவிட்டால் அது மிகவும் எளிதான விஷயமாகத் தோன்றும்.

முதலில் பாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பாதத்தில் எண்ணெய் தடவி நீவி விடுங்கள். சாதாரணமாக குழந்தைக்கு பத்து நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். பாதத்தில் நான்கு நிமிடத்திற்கு மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு இரண்டு கால்களில் எண்ணெய் தடவி கீழ் இருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யவும். பிறப்புறுப்பில் எண்ணெய் தேய்க்க வேண்டாம்.

கால்களை சற்று அகற்றி தொடை பகுதியில் மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அடுத்ததாக தோள் பகுதியில் மசாஜ் செய்யுங்கள். நெஞ்சு பகுதியில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது குழந்தையின் கண்களை பார்த்து சிரித்து கொண்டே இருங்கள். வயிறு பகுதியிலும் இதே போல வட்டமாக மசாஜ் செய்யவும். 

குழந்தையைத் திருப்பி முதுகில் மசாஜ் செய்யும் போது தலையை பிடித்துக் கொண்டு மேல் இருந்து கீழ் நோக்கி மசாஜ் செய்யலாம். குழந்தை அழுதால் மசாஜ் செய்வதை நிறுத்தி விடவும். மசாஜ் செய்வது குழந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

Disclaimer