Makar Sankranti 2024 : மகர சங்கராந்தியன்று கட்டாயம் தானம் செய்யுங்கள்

மகர சங்கராந்தியன்று பொருட்களை தானம் செய்வதால் வாழ்வில் இருந்து இன்னல்கள், துன்பங்கள் என அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Raja Balaji
Black Sesame

மகர சங்கராந்தி நாளில் பொருட்களைத் தானம் செய்வதால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கஷ்டங்கள், துக்கங்கள் மற்றும் தொல்லைகளில் இருந்து விடுபடுவோம் என்பது நம்பிக்கை. இந்த நாளில் சூரிய பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற மகர சங்கராந்தியன்று என்னென்ன பொருட்களைத் தானம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். 

பொதுவாக, மக்கள் எள், வெல்லம் மற்றும் கிச்சடி ஆகியவற்றை மட்டுமே தானம் செய்கிறார்கள். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களைத் தானம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பெருக்கலாம்.

தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

  • மகர சங்கராந்தி நாளில் கிச்சடி தானம் செய்யுங்கள். இந்த நாளில் கிச்சடி தானம் செய்வது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதாக நம்பப்படுகிறது.
  • எள் மற்றும் வெல்லம் தானம் செய்வதும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அவற்றை தானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். உங்கள் ஜாதகத்தில் சூரியனும் சனியும் மோசமான நிலையில் இருக்கும் பட்சத்தில் மகர சங்கரந்தியன்று வெல்லம் மற்றும் எள் தானம் செய்வது ஜாதகத்தில் நிலையை மேம்படுத்தும்.
Jaggery
  • மகர சங்கராந்தி நாளில் கருப்பு எள்ளை செம்பு பாத்திரத்தில் நிரப்பி ஏழைக்கு தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு சனிபகவானின் அருள் கிடைக்கும்.
  • இந்தப் புனித நாளில் உப்பு தானம் செய்வது சிறப்பு என்று கருதப்படுகிறது. எனவே உப்பு தானம் செய்யுங்கள். உப்பை தானம் செய்வதால் அனைத்து தீமைகளும் நீங்கும். எனவே மகர சங்கராந்தி நாளில் உப்பு தானம் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
Salt
  • சிவபுராணத்தின்படி மகர சங்கராந்தியன்று புது வஸ்திரம் தானம் செய்தால் புண்ணியமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஏதேனும் நோய் இருந்தால் ஆடைகளைத் தானம் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினை குறையும்.
  • நெய் தானம் செய்வதாலும் நல்ல பலன் கிடைக்கும். நெய் தானம் செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனுடன் மகாலட்சுமி தேவியின் அருளையும் நீங்கள் பெறலாம்
  • உணவு தானியங்களைத் தானம் செய்வதும் மிகவும் நல்லது. இந்நாளில் ஏழு வகையான தானியங்களைத் தானம் செய்தால் அன்னபூரணி அன்னை மகிழ்வாள். உங்கள் வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது.
  • மகர சங்கராந்தி தினத்தன்று சாதம், பால், தயிர் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இதனால் உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
  • மகர சங்கராந்தி தினத்தன்று தாமிர பாத்திரங்களைத் தானம் செய்வதும் மிகவும் நல்லது. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் அரசாங்க ஆதாயம் பெறுவீர்கள்.
Disclaimer