நெய் உங்கள் சருமத்தை பல வகைகளில் மேம்படுத்தி உண்மையான முகப்பொலிவைத் தரும் இது குறித்து விரிவாக இதில் காணலாம்.மக்களின் பல பேர் இல்லங்களில் இன்றியமையாத ஒன்றாக நெய் உள்ளது. குறிப்பாக நெய் நாம் சமைக்கும் உணவை சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மாற்றும். உதாரணமாக காய்ந்த ரொட்டியில் ஒரு ஸ்பூன் நெய்யை தடவி சமைத்தால் ரொட்டியின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும். அந்த அளவிற்கு நெய்யில் நல்ல மனமான, சுவைத்தன்மை அதிகம் உள்ளது. உணவுகளில் இதை கலக்கும் போது பல்வேறு பரிணாமங்களில் உணவுகளுக்கு கூடுதல் சுவை கூடும்.
முகத்திற்கு நெய்
நெய் பெண்களின் சருமத்திற்கும், முகப்பொலிவிற்கும் மிகவும் நல்லது.
தோல் பராமரிப்பு
தினசரி வாழ்க்கையில் இல்லத்தரசிகள் தங்களது முகப்பொலிவு தோல் பராமரிப்பில் கவனம் செலுத்துவதில்லை. அப்படியே கவனம் செலுத்தினாலும், சந்தைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த ஸ்கின்கேர் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பலர் ஏமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. வீட்டில் இருக்கும் நெய்யை வைத்து பெண்களின் முகப்பொலிவையும் சருமத்தையும் சிறப்பாக பேணிகாக்க முடியும்.
முகத்தில் நெய் தடவப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உண்மையில் நெய்யின் சத்துக்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கரைகள், பருக்கள், கருவளையம் நீண்ட நாள் தழும்புகளை நீக்கும் வல்லமை கொண்டது.முகப்பரு வந்தால் உடனே போவதில்லை முகற்றில் வலி ஏற்படுத்தி நாளடைவில் கருமையான தலும்புகளாக மாறுகிறது. நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நெய்யில் காணப்படுகின்றன.முகத்தில் எப்படி நெய்யை தடவி பளபளப்பான சருமத்தையும் முகப்பொலிவையும் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
முகத்தில் நெய் அதன் நன்மைகள்
நெய்யிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது தோளில் ஸ்கின் கேர் பொருட்களைப் போல் செயல்படுகிறது. குறிப்பாக பளபளப்பான சருமத்தை பெற நெய்யை பயன்படுத்தலாம். வைட்டமின்கள் நிறைந்த நெய் அதன் சிறந்த தன்மையால் உடலில் உள்ள தோள்களை சுருக்கமடையாமல் பாதுகாக்கிறது. எப்போதும் உங்களை இளமையாக வைத்திருக்கவும் தோல் சுருக்கம் அடையாமல் இருக்கவும் நெய் மிகவும் உதவுகிறது. மேலும் இது சருமத்தையும் இறுக்கமாக்கி பொலிவு தருகிறது.
பெண்களுக்கு நெய்யின் பயன்கள்
பெண்கள் தினசரி வீட்டில் சமையலறையில் வெப்பத்தில் நிற்கும் போது வியர்வை அதிகம் வெளிவந்து, முகத்தில் அரிப்பு ஏற்படும். அப்போது நெய் தடவினால் அரிப்பு நீங்கி முகப்பொலிவு கிடைக்கும். எப்போதும் வறண்ட சருமத்தை கொண்டிருக்கும் பெண்கள் நெய்யை தடவும் போது சருமத்திற்கு ஈரப்பதம் கிடைத்து பளபளப்பாக வைத்திருக்கும். உதட்டில் தினசரி நெய் தடவி வந்தால் உதடு வெடிப்பு பிரச்சனை முற்றிலும் நீங்கும். கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்க தினமும் இரவில் நெய் தடவி உறங்கினால் கருவளையங்கள் காணாமல் போக நெய் உதவும்.அதேபோல் தினமும் இரவில் முகத்தில் நெய்யை தடவி படுக்கும் போது முகத்தில் இருக்கும் நீண்ட நாள் முகப்பருக்கள் நீங்க உதவும். நெய்யைத் தொடர்ந்து முகத்தில் தடவும் போது கடினமாக இருக்கும் முகப்பருக்கள் இலகுவாக மாறி காணாமல் போய்விடும்.
நெய் மற்றும் குங்குமப்பூ
நெய்யில் குங்குமப்பூ கலந்து முகத்தில் தினசரி தடவி வரவும். குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை ஸ்பூன் நெய்யை எடுத்து அதில் மூன்று அல்லது நான்கு குங்குமப்பூ வளையங்களை சேர்க்கவும். 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
நெய் மற்றும் மஞ்சள்
தோல் இறுக்கம் மற்றும் தழும்புகளை நீக்க இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் முயற்சி செய்யலாம் ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப நெய் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் எடுத்துக் கொள்ளவும் இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் பத்து முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின் தண்ணீரில் கழுவவும் முகம் பளபளக்கும்.
நெய் மட்டும்
நெய்யை எதோடும் சேர்க்காமல் நெய்யை மட்டும் பயன்படுத்தி முகப்பொலிவும் பெறலாம். உங்கள் உள்ளங்கையில் இரண்டு ஸ்பூன் நெய்யை எடுத்து முகத்தில் முழுவதுமாக மசாஜ் செய்யவும்.முகத்தில் உள்ள முடிகளில் நெய் படுவதால் பிரச்னை இல்லை.இதனால் சருமம் பளபளக்கும் இரவில் தூங்கும் முன் கண்களுக்கு அடியில் நெய் தடவி வந்தால் கருவளைய பிரச்சனை நீங்கும். பருக்கள் மீதும் நெய்யை விரல்களால் தடவும் போது முகப்பொலிவு கிடைக்கும்.