Poonam Pandey Death : கர்ப்பப்பை புற்றுநோயால் கவர்ச்சிக் கன்னி பூனம் பாண்டே காலமானார்

தென் இந்தியாவின் சில்க் ஸ்மிதா என அறியப்பட்ட நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்

Raja Balaji
poonam pandey dies of pelvic canver

கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக பிரபல கவர்ச்சி நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே காலமானார். அவருக்கு வயது 32. இந்தத் தகவலை அவரது சமூக ஊடக மேலாளர் இன்ஸ்டா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அவர் சுருண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 25ஆம் தேதி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் ஆரோக்கியமாக இருப்பது போலவே தெரிந்தது.

 
 
 
View this post on Instagram

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

பூனம் பாண்டேவின் சமூக ஊடக மேலாளரான பாருல் சாவ்லாவின் இந்த பதிவால் பாலிவுட் வட்டாரமும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மறைவையொட்டி சமூக ஊடங்களில் பூனம் பாண்டேவின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

poonam pandey pelvic cancer

இவர் 1991ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்தவர். சர்ச்சைகளுக்குத் துளியும் பஞ்சமில்லாத பூனம் பாண்டே கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடந்த போது மிகவும் பிரபலமானார். இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஆடைகளைக் கழற்றி நிர்வாண புகைப்படம் வெளியிடுவேன் என கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இந்த அறிவிப்பு செய்தி தாள்களிலும், சமூக ஊடங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்றதும் அவர் அமைதியாகி விட்டார். இதில் கிடைத்த புகழை வைத்து அவருக்குப் பாலிவுட்டில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. 2012ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்ற போது தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டார். 

poonam pandey death update

2013ஆம் ஆண்டில் நாஷா எனும் படத்தில் மிகக் கவர்ச்சியாக நடித்திருந்தார். 2018ஆம் ஆண்டு வரை மொத்தம் ஆறு படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிகை கங்கா ரனாவத்தின் தொகுத்து வழங்கிய லாக் அப் தொடரில் பங்கேற்று தனது ரசிகர் பட்டாளத்தை உயர்த்தினார். எனினும் அவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி சாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் பூனம் பாண்டே. ஆனால் அவரது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்கவில்லை. கோவாவில் தேன் நிலவு கொண்டாடிய போது கணவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வைத்து காவல் நிலையத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செப்டம்பர் 23ஆம் தேதி சாம் கைது செய்யப்பட்டார். 

poonam pandey died of cancer

பாத்ரூம் வீடியோ 

ஒரு முறை பாத்ரூமில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த வீடியோவை யூடியூப் முடக்கி விட்டது.

கொரோனா விதிமீறல் கைது 

கொரோனா காலகட்டத்தில் அரசின் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிங்க சக மனிதர்களுக்காக வாழ்ந்த பொன்மன வள்ளல் விஜயகாந்த் மறைவு!

பாண்டே செயலி 

2017ஆம் ஆண்டில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதற்கு பாண்டே செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் சில புகைப்படங்கள் மட்டுமே பதிவிட்ட நிலையில் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து அந்த செயலியை உடனடியாக நீக்கியது.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த பூனம் பாண்டே 32 வயதில் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Disclaimer