VidaaMuyarchi Update - அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரவ்

தல அஜித்துடன் நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரவ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Raja Balaji
Ajith and Arav in Azerbaijan

துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளது. ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்குமா என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.

ஏனென்றால் படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்ற தகவலைப் படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரவ் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

பில்லா திரைப்படத்தின் 16 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராக இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படம் லட்டு போல் அமைந்துவிட்டது. இதனால் சமூக வலைதளங்களில் விடாமுயற்சி மற்றும் 16 Years of Billa டேக் வைரலாகி வருகின்றன. அந்தப் பதிவில் இந்த தருணத்திற்காக 20 வருடங்கள் காத்திருந்தேன் எனவும் விடாமுயற்சி எப்போதும் தோற்காது எனவும் ஆரவ் பதிவிட்டுள்ளார்.

Arav with Magil Thirumeni

மேலும் படிங்க தனலட்சுமி, ஜெஸ்ஸி, ஜானு… திரிஷாவின் திரையுலக பயணம்

இதைவிட அவர் இரண்டாவதாகப் பதிவிட்ட புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் இருக்கிறார். இதன் மூலம் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் இணைவது உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே அஜர்பைஜான் நாட்டில் இருக்கும் புகைப்படங்களைத் திரிஷாவும், ரெஜினா கேசன்ட்ராவும் பதிவிட்டு விடாமுயற்சியில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்தனர். இதனால் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் முழு விவரமும் அஜித் ரசிகர்களுக்குத் தெரியவந்துள்ளது. கூடுதல் தகவலாகப் புத்தாண்டு 2024 அல்லது பொங்கலுக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்புள்ளது.

மேலும் படிங்க விடாமுயற்சி நாயகி ரெஜினா கேசன்ட்ராவுக்கு பிறந்தநாள்

Disclaimer